ஆண்டிபட்டி நன்மை தருவார்கள் ஐயப்ப சுவாமி கோவிலில் மகரஜோதி வழிபாடு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் ஐயப்ப சுவாமி கோவிலில் மகரஜோதி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது .இக்கோயில் வளாகத்தில் 49 அடி உயர காளியம்மன், சப்த கன்னிமாருடன், குருபகவான் பீடம் மற்றும் பரிவார தெய்வங்களை உள்ளடக்கி பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
இக்கோவிலில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி புதிதாக நிர்மானம் செய்யப்பட்ட குதிரை மேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மாகாளி அம்மனுக்கு 108 குடங்களில் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி வழியாக ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது .விழாவின் தொடர்ச்சியாக தினசரி சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்
நேற்று விழா நிறைவு நாளைமுன்னிட்டு கோயிலுக்கு கிழக்கே நேர் எதிர் திசையில் உள்ள டி. சுப்புலாபுரம் நாழிமலையில் விரதம் இருந்த பக்தர்கள் சார்பில் மகரஜோதி ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஐயப்ப சரணம் கோசமிட்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்து வன்னியம் தலைமயிலான விழா குழுவினர் செய்திருந்தனர் . நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக