குடியரசு தின விழா:கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவ, மனைவிகள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் 76 வது குடியரசு தின விழா கீழக்கொட்டையூர் வள்ளலார் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க தலைவர். லயன் டி.விஜயன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், பொருளாளர் அருண் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக லயன் மருதையன். லயன் குமார். லயன் இரவி ,லயன் இராஜேந்திரன். லயன் அசோகன் லயன் அசோக் பள்ளியின் தலைவர் தயாளன் செயலாளர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.தொடர்ந்து பலவேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ,மாணவிகள் மாறுவேட போட்டியில் சுபாஷ் சந்திர போஸ் மகாத்மா காந்தி,வேலு நாச்சியார், பாரதியார்,உள்ளிட்ட பல வேடமிட்டு அசத்தினர்.திருக்குறள், திருவருட்பா,ஓவியம் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் தலைவர் செயலாளர் பொருளாளர் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்கள்
விழாவில் ஆசிரியர்கள்,சன் முன்னாள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் சார்பில் அரிமா உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள். நிறைவில் பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க சாசன தலைவர் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக