பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டில் முதல் துக்க நிகழ்வாக இது நடந்துள்ளது. இதுபோல் இனிமேல் வராமல் இருப்பதற்கான வேலைகளை பார்ப்போம். - வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்திப்பில் அவர் கூறியதாவது:
அருப்புக்கோட்டை பட்டாசு ஆலை விபத்து குறித்த கேள்விக்கு.
பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் அறிவித்திருக்கிறார். அதுபோக அந்த உரிமையாளரிடம் பேசி அதற்கு ஒரு தொகையை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக அனுதாப அடிப்படையில் வாங்கி கொடுக்கிறோம். வெடிமருந்துகளை கலக்கும்போது இந்த சம்பவங்கள் நடக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் தவறுதலாக நடந்து விடுகிறது. இந்த ஆண்டில் முதல் துக்க நிகழ்வாக இது நடந்துள்ளது. இதுபோல் இனிமேல் வராமல் இருப்பதற்கான வேலைகளை பார்ப்போம். அதன்படி முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தி வருகிறார் என வருவாயத்துறை அமைச்சர் K.K.S.S. ராமசந்திரன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக