இராமநாதபுரத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக மாவட்ட கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து வாழ்த்தி பாடுவது தொடர்ந்து புறக்கணித்து வரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டி ப்ளாக் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உட்பட தி.மு.க, மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக