ராகுல்காந்தி மீது பொய் வழக்கு பதிந்த பாஜக அரசைக் கண்டித்தும் அதற்கு துணை போகும் மத்திய மோடி அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

ராகுல்காந்தி மீது பொய் வழக்கு பதிந்த பாஜக அரசைக் கண்டித்தும் அதற்கு துணை போகும் மத்திய மோடி அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


குடியாத்தம் , ஜன 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல்காந்தி அவர்கள் மீது பொய் வழக்கு பதிந்த அசாம் மாநில பாஜக அரசைக் கண்டித்தும் அதற்கு துணை போகும் மத்திய மோடி அரசைக் கண்டித்தும் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இன்று (22.01.2025) புதன்கிழமை மாலை 4 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் த சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், சரவணன், உவைஸ் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்
நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர், செல்வக்குமார், நித்தியானந்தம், தனசேகர் பேரணாம் பட்டு நகர தலைவர் முஜம்மில் அஹ்மத், பள்ளிக்கொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட  RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட கலைப் பிரிவு தலைவர் காத்தவராயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் வட்டார தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad