அடைக்கலாபுரம் அற்புத நகர் புனித அந்தோணியார் அற்புதகெபி திருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

அடைக்கலாபுரம் அற்புத நகர் புனித அந்தோணியார் அற்புதகெபி திருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அடைக்கலாபுரம் அற்புத நகர் புனித அந்தோணியார் அற்புதகெபி திருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் அற்புத நகரில் உள்ள புனித அந்தோணியார் அற்புத கெபியில் ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 

வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு நவநாள் திருப்பலி, ஜெபமாலையுடன் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து பெரியதாழை அருட்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் சிறப்பு மறையுரை நிகழ்த்தினார். 

இதில் அறநிலையம் ஆன்மீக தந்தை செட்ரீக் பீரிஸ், ஆலய பங்குத்தந்தை லாசர் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

விழாவையொட்டி தினமும் ஒவ்வொரு நாள் திருப்பலி, ஜெபமாலை, நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 3ம் தேதி 12ம் நாள் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை சப்பர பவனி, 7 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. 

மணவை மறை வட்ட முதன்மை குரு பென்சிகர் தலைமை ஆராதனை நிகழ்த்துகிறார். சேரன்மகாதேவி அருட்தந்தை பிரான்சிஸ், செட்ரீக் பீரிஸ் ஆகியோர் மறைவுரையாற்றுகின்றனர். 

வரும் 4ம் தேதி 13ம் நாள் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை ,6.30 மணிக்கு பெத்தகாலன்விளை அருட் தந்தை ஜஸ்டின் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. 

அருட்தந்தை மைக்கில் ஜெகதீஷ், பால் ரோமன் ஐயர் மறையுறை நிகழ்கின்றனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை லாசர், அருட் சகோதரிகள், திருவிழா பணி குழுவினர், இறைமக்கள் செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad