திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடும் விதமாக சேலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேலம் மாவட்ட மைய நூலகத்தில் (3112.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர் திருவுருவச்சிலையானது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கடந்த 0101.2000 அன்று கன்னியாகுமரியில் நிறுவப்பட்டது. இத்திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இதன் வெள்ளி விழா நிகழ்வு கன்னியாகுமரியில் கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில் சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறளின் பெருமையை உணர்த்தும் வகையிலான கண்காட்சிகள் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியில் திருக்குறள் தொடர்பான ஓவியங்கள். புகைப்படங்கள்.புத்தகங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இனங்கள் காட்சிபடுத்தப்பட்டது.
அதேபோன்று, திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக மாணவ, மாணவிகள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு கடந்த 23.122024 முதல் 31.12.2024 வரை திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினாப் போட்டி மற்றும் இல்லத்தில் நூலகம் அமைத்து சிறப்பாகப் பராமரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குஇன்றையதினம் பாராட்டுச் சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000/-மும் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலர் திரு. து.விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திருமதி மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வாசகர் வட்ட நிருவாகிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக