பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளுடன் மாண்புமிகு அமைச்சரை சந்தித்த ஈரோடு கிழக்கு மாவட்ட மமகவினர் அதனை தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற துவங்கிய தமிழ்நாடு அரசு....
மனிதநேய மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு நிரந்தர தீர்வுக்கான 110 kw துணை மின் நிலையம் (Substation) அமைக்க கோரியும்,
இந்து சமூக மக்கள் பயன்பாட்டில் உள்ள பெரிய அக்ரஹாரம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்தும், மின் விளக்கு அமைத்து தரக்கோரியும்,
அக்ரஹாரம் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த அறுவைமனை கூடம் (Slaughter House) நவீன முறையில் அமைத்து தரக்கோரியும்...
பெரிய அக்ரஹாரம் உயர்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் அரபிக்கல்லூரி இரண்டுக்கும் நடுவில் இயங்கி வரும் மதுபானக்கடயை அகற்றக்கோரியும்,
மமக மாவட்ட தலைவர் A.சித்தீக் தலைமையில், மனிதநேய மக்கள் கட்சியினர் மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து முதல் பணியாக, இந்து மக்கள் பயன்படுத்தும் மயான சாலை சீரமைப்பு, மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் துவங்கியது தமிழ்நாடு அரசு அதனை பார்வையிட்ட ஈரோடு கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக