திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க பாதை கோரி நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஆலம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அவர்களோடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அதிமுகவினர் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய மக்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அதிமுகவினர் கிராம ஆண்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து கிராமத்தில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் இளைஞர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவத்தில் அவர்களை விடுவிக்குமாறு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் நான்கு வழிச்சாலை பணியால் விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் மற்றும் கைது.
போராட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரும் அதிமுகவினரும் சாலையில் அமர்ந்து போராடியவர் காவல்துறையினரால் கைது.
திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமத்தில்நான்கு வழி சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள்தொடங்கப்பட்டு எப்போது திருமங்கலம் -ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒரு புறம் அரசு பள்ளிக்கூடம்,ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது மறுபுறத்தில்.500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிராமத்தில் உள்ளது.இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள்,பெண்கள் வயதானவர்கள் என சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் 20க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காயமடைந்துள்ளதாகவும் எனவே சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்து அதிகாரிகளை துரத்தி அடித்தனர்.அதன் பிறகும் அதிகாரிகள் எந்த உத்திரவாதமும் அளிக்காததால்கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைகள் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து கோசங்கள் எழுப்பி வருகின்றனர். தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.கிராம மக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதை அறிந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவருமான முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் எனது ஆதரவாளர்களுடன் மக்களுடன் சேர்ந்து சுரங்கப்பாதை வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஆலம்பட்டி கிராம மக்களின் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தால் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீசார் வட்டாட்சியர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை முக்கியமான சாலை என்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.இதைத் தொடர்ந்துபேருந்துகளை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.மற்ற ஊர்களிலெல்லாம் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக கொண்டு செல்லப்படுகிறது ஆனால் ஆலம்பட்டி கிராமத்தில் மட்டும் ஊருக்குள்ளே நான்கு வழி சாலை அமைவதால் நான்கு வழிச்சாலைக்காக இடம் கொடுத்தவர்கள் கிராம மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.சாலையின் ஒரு புறம் குடியிருப்புகளும் மறுபுறம் பள்ளிக்கூடம் ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அலுவலகங்கள் இருப்பதால் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாக கூறிய மக்கள்உங்களுக்கு சாலையை கடக்க சுரங்க பாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பணியை தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்தும் இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் இடத்திலும் தான் புகார் அளித்ததாகவும் ஆனால் தற்போது வரை அதிகாரிகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் இன்று கிராம மக்கள் சுரங்கப்பாதை வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் அவர்களோடு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக