தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் மனு.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாளங்களை தவிர்க்குமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் மனு,

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் முருகப்பெருமானை நடை பயணமாக வந்து ஒவ்வொரு வருடமும், தைப்பொங்கல், தைப்பூசம் ஆகிய திருநாளுக்கு மாதம் முழுவதும் தரிசிப்பது வழக்கம். 

அவ்வாறு நடை பயணமாக வரும் பக்தர்கள் வாகனங்களில் ஒலி பெருக்கி வைத்து பாட்டுப்பாடி, ஆடி வருவதும் வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் வெவ்வேறு ஜாதியினராக இருப்பதால் தங்கள் ஜாதி அடையாளங்களான, கொடி பனியன், கயிறு அணிந்து வந்து, ஆடி பாடும் பொழுது ஜாதி கலவரங்களாக மாறி கலவரம் செய்யும் பொழுது, வணிகர்களின் கடைகளும் சூறையாடப்படுகிறது. 

எனவே காவல்துறையினர் ஒவ்வொரு ஆண்டும். முன் எச்சரிக்கையாக செய்வதுபோல் இந்த 2025 ஆம் ஆண்டும் பக்தர்கள் ஜாதி அடையாளமான பனியன், கைகயிறு கொடி ஆகியவற்றை அணிந்து வராமல், ஊருக்கு வெளியே ஜாதி அடையாளங்களை அப்புறப்படுத்தி ஜாதி கலவரம் ஏற்படாமல் 

வியாபாரிகளை பாதுகாத்து வியாபாரம் செய்ய உதவும்படி கேட்டுக்கொள்வதோடு சன்னதி தெருவில் அதிகமான கூட்ட நெரிசலோடு பக்தர்கள் வருவதால், இந்த பகுதியில்தான் வருடா வருடம் பிரச்சனைகள் வருவதுண்டு, 

ஆகையால் சன்னதி தெரு மற்றும் விடலை பிள்ளையார் கோவில் பகுதியில் அதிகப்படியான காவலர்களை நியமித்து கூட்ட நெரிசலை கட்டுபடுத்தி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். என தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நிறுவன தலைவர் காமராசு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad