கலெக்டர் வருகை - ஹெத்தையம்மன் பண்டிகை கன்னேரிமுக்கில் தூய்மை பணிகள். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

கலெக்டர் வருகை - ஹெத்தையம்மன் பண்டிகை கன்னேரிமுக்கில் தூய்மை பணிகள்.

 

IMG-20250116-WA0045

கலெக்டர் வருகை - ஹெத்தையம்மன் பண்டிகை கன்னேரிமுக்கில் தூய்மை பணிகள்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் அமைந்துள்ள முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் நினைவு இல்லத்திற்க்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.01. 2025 வியாழக்கிழமை) வருகைதருவதால் கன்னேரிமுக்கில் சாலையோரத்தில் தூய்மைபணியானது கோத்தகிரி தூய்மைபணியாளர்களால் சீர் செய்யப்பட்டது. சென்ற வாரம் ஹெத்தையம்மன் திருவிழாவிற்க்காக சாலையோரம் உள்ள புற்கள் அகற்றப்பட்டது இன்று  தூய்மை கோடு அமைக்கும் பணி நடைபெற்றதை கன்னேரிமுக்கு ஊர் தலைவர் திரு. ஹாலாகவுடர் அவர்கள் பார்வையிட்டார் . ஹெத்தையம்மன் குடை செங்கோல் ஊர்வலம் மற்றும் கலெக்டர் வருகைக்காக தூய்மை பணியை  ஆணையிட்ட கோத்தகிரி தூய்மை பணிகள் ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்களை பொதுமக்களுடன் இணைந்து தமிழக குரல் பாராட்டுகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad