ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா

 

IMG_20250112_193147_055

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா.



மதுரை மாவட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக
எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் அனைவரையும் வரவேற்றார். குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்  தலைமையில் பொங்கல் விழா மிக ம கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயக்குனர் பிரகல்யா பொங்கல் வைத்தும் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் அவர்கள் சூடம் ஏற்றியும் பூஜையை தொடங்கி வைத்தார்கள். ர‌ஜினி மன்ற தலைவர் பால தம்புராஜ், தயாரிப்பாளர் மருது பாண்டி அனைவரும் இணைந்து சக்கரை பொங்கல், வடை, தேனீர் வழங்கினார்கள். உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி, மீசை அழகப்பன், நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், மலையாண்டி, திருநாவுக்கரசு, ஆட்டோ டிரைவர் பாண்டி, ஜெபமாலை, தங்கபாண்டி, ஆர்.அப்துர் ரஹீம், போட்டோ கிராபர் ஸ்ரீகாந்தன், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ம், நடிகையுமான அங்கிதா, சமூக சேவகி தேவி பிரியா,  மாரியம்மாள், சமூக சேவகியும், நடிகையுமான வனிதா, நடிகை மஹாலெட்சுமி, நடிகை வைஷ்லாலி, மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டார்கள். குழந்தைகள் இருவருக்கும், கல்லூரி மாணவி ஜந்து பேருக்கும் உடைகள் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு மதியம் 60 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா வாழ்த்துக்கள் கூறினார்கள். முடிவில் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad