மானாமதுரை கன்னார் தெருவில் செயல்பட்டு வரும் 'ஆதரவு அறக்கட்டளை' சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் "ஆதரவு அறக்கட்டளை" செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையில் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, பியூட்டிசியன் பயிற்சி போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் வருகின்ற செவ்வாய்க்கிழமையன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆதரவு அறக்கட்டளையின் சார்பாக நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர், பாரதி அச்சக உரிமையாளர் தேவதாஸ், தொழிலதிபர் சரவணன், ஆதரவு அறக்கட்டளையின் நிறுவனர் செல்வம் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக