வேலூர் ,ஜன 22 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு காவல் துறை தலைமையக ஆணையின்பேரில் மாவட்டம் தோறும் சைபர் கிரைம் சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு பிறபிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மதிவாணன் உத்தரவின்படி சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் A. அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் கடந்த 08.01.2025 மற்றும் 09.01.2025 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் அந்ததந்த பள்ளிகளில் நடைபெற்றது. இவற்றில் திரளான மாணவர்கள் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர் இந்த போட்டிகளில் பங்கு பெற்று அவற்றில் மாவட்ட அளவில் சிறந்த மூன்று கட்டுரை மற்றும் ஓவியங்கள் தேர்வு செய்யப் பட்டன. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் பின்வருமாறு : சைபர் கிரைம் விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் முதல் பரிசு ஊசூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சார்ந்த 6-ஆம் வகுப்பு மாணவி செல்வி. லித்தியஸ்ரீ மற்றும் இரண்டாம் பரிசு வஞ்சூர் அரசு மேல் நிலைப்பள்ளியை சார்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி புகழினி மற்றும் மூன்றாம் பரிசு கீழ் அரசம்பட்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை சார்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி கவாதி ஆகியோருக்கும் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் முதல் பரிசு கரிகிரி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அபின் பாணு மற்றும் இரண்டாம் பரிசு இடையன்சாத்து அரசு மேல்நிலைப் பள்ளியை சார்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் ஐசக் ஆண்டர்சன் மற்றும் மூன்றாம் பரிசு வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி பிருந்தா ஆகியோருக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.1500, ரூ.1000, ரூ.500/- பண வெகுமதியும், பாராட்டு சான்றிதழும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
N.மதிவாணன் இன்று 22.01.2025 மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
A. அண்ணாதுரை, சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் R. ரஜினி குமார் மற்றும் உதவி ஆய்வாளர் A. சதிஷ் குமார், சைபர் கிரைம் போலிசார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக