கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள ராஜமாதாங்கி மஹாலில் வளர்பிறை வீட்டுமனை நிலம் முகவர்கள் நல சங்க ஆண்டின் துவக்கமாக முதல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தினசரி நாட்காட்டியும், உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமை ஏற்று, பொருளாளர் மரிய அருள்தாஸ் அனைவரையும் வரவேற்று உறுப்பினர் சண்முகம் தொகுத்து வாழ்த்துரை வழங்கினர் தொடர்ந்து சங்கத்தின் சட்ட ஆலோசகர் செல்வகுமார் B.A.B.L அவர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் உறுப்பினர் அட்டையும் வழங்கினார்.
சங்கத்தின் தீர்மான நகலை உறுப்பினர் சுதாகர் வாசித்தார், இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர். இறுதியாக சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக