இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) சார்பில் குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முதலாவது DPL கிரிக்கெட் போட்டி -2024! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) சார்பில் குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முதலாவது DPL கிரிக்கெட் போட்டி -2024!


குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை தடுப்போம் என்கிற தலைப்பில் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO) சார்பில் சென்னையில் பன்னாட்டு தூதரகங்களுக்கு இடையிலான முதலாவது DPL கிரிக்கெட் போட்டி சென்னை  கொரட்டூரிலுள்ள சோகா இகேடா மகளிர் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை மலேசியாவுக்கான இந்திய துணை தூதர் மேதகு சரவணக்குமார் குமார வாசகம் அவர்கள் டாஸ்  வீசி போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் பேட் செய்த அமெரிக்க தூதரக அணி 12 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது. 111 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய மலேசிய தூதரக அணி 12 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களுடன் வெற்றியை நழுவ விட்டது. வெற்றி வாகை சூடிய அமெரிக்க தூதரக அணி வீரர்களை சக அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.


மேலும் இந்நிகழ்வில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் என்கிற விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டு போட்டியில் வென்ற அமெரிக்க தூதரக அணி வீரர்களுக்கான வெற்றிக் கோப்பையை ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது ஆசிப் அலி வழங்கினார்.  


அமெரிக்க துணை தூதரகத்தின் மேலாண்மை அதிகாரி கோவன்டோலின் அவர்கள் வீரர்களுக்கு  பதக்கங்களை அணிவித்து பாராட்டினார். இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பின்(ICWO) நிறுவன செயலாளர் ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.மேலும் இந்த கிரிக்கெட் போட்டியை தொகுத்தும் வழங்கினார்.


ஜூபிலி ஹவுசிங் இயக்குனர் டாக்டர் ஏ.ஆர். தர்மலிங்கம், சோகா இகேடா மகளிர் கல்லூரியின் தலைவர் சேதுகுமணன், சென்னை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ராஜ்குமார்,சோகா இகேடா மகளிர் கல்லூரியின் முதல்வர்  டாக்டர் மீரா முருகேசன், துணை முதல்வர் டாக்டர் கண்மணி சுப்ரமணியன், வி.ஹெச்.எஸ் திட்ட இயக்குனர் டாக்டர் ஜோசப் வில்லியம்ஸ், ஏ.ஆர்.எம் (ARM) இயக்குனர் பக்தவச்சலம், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மாலிம், தமிழ்நாடு கிரிக்கெட்  அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 


மேலும் இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற உதவிய ஸ்போர்டஸ் (SPORTUS), எஸ். பி. எல். டி டிராவல்ஸ் (SBLT TRAVELS), பெய்லி மினரல் வாட்டர் (BAILEY MINERAL WATER) , எம். எம். சி. டி(MMCT-MACRO MARVEL CHARITABLE TRUST),எவர்ஷைன் எக்ஸிபிட்டர் (EVERSHINE EXHIBITOR), லதா ரோட்லைன்ஸ் (LATHA ROADLINES) இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்கம்(FPA), பேக்ஸ்-எஸ்.சி.ஐ இந்தியா (PAX-SCI INDIA), நக்ஸத்ரா (NAKSHATRA) ஆகிய நிறுவனங்கள் உதவிகரமாக இருந்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/