தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக மதுபாலன் நியமணம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக மதுபாலன் நியமணம்.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், பிப்.11, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். 


தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மதுரை மாநகராட்சி ஆணையராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமைத்து பிறப்பித்துள்ளார்.


தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மதுபாலன் 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்.  ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே 71வது இடத்தைப் பிடித்தார். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றவர். 28வயதிலேயே மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டவர். 


கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றியவர். பணிபுரிந்த இடங்களில் பணியில் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெயரெடுத்தவர். 


இவரை பொதுமக்கள் அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் அவர் பணிபுரிந்த இடங்களில் சந்திக்கலாம் என்ற தகவலும் உள்ளது. அதுபோல மதுரை மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த போது பணிகள் நடைபெறுகின்ற இடங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வு பணியை மேற்கொள்வார்.  


பணிகளை சரிவர செய்யாத பல ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad