மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டுவதற்கு தடை காவல்துறைக்கு எம்பவர் அமைப்பு கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டுவதற்கு தடை காவல்துறைக்கு எம்பவர் அமைப்பு கோரிக்கை.

.com/img/a/


தூத்துக்குடி, பிப்.2, தூத்துக்குடியில் மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்டப்படுவதை தடை செய்ய வேண்டுதல் என எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.



இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகரில் சமீப காலமாக மின் கம்பங்களில் மிகப் பெரிய விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டு வருகின்றது. 



இந்த விளம்பரங்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றது. ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு விளம்பர பதாகைகளை மின் கம்பங்களில் தொங்க விடுவதை உடனடியாக தடை செய்ய வேண்டுகிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad