திருநெல்வேலி, பிப்.11, பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் அய்யப்பன்(எ) சுரேஷ் (வயது 27), இவர் முத்தாலங்குறிச்சி கிராமத்தில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று(10-02-2024) பிற்பகல் 1 மணியளவில் செங்கல் சூளை வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சிவந்திப்பட்டி பற்பநாதபுரம் வீட்டிற்கு வரும் வழியில் செய்துங்கநல்லூர் சத்தக்காரன்பட்டி இசக்கியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று (11-02-2024)பாளை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில் அருகே மற்றொரு வாலிபரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இது பற்றி தகவலறிந்த பாளை.பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையுண்டவர் பாளை சமாதானபுரம் காந்திநகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாபு செல்வம்(வயது 22)என தெரியவந்துள்ளது.
மேலும் பாபு செல்வத்தை கொலை செய்து விட்டு பின்னர் அதே நபர்கள் அய்யப்பனை கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளும், கொலையுண்டவர்களும் நன்கு பழக்கமானவர்கள் என்பதும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் டாஸ்மாக் பதிவு உறுப்பினர்கள். அடிக்கடி "ரசவாத" சர்ச்சையில் சிக்கி தன்னை தனக்குள் தேடி விடை கிடைக்காததால் அவர்களுக்கு உள்ளேயே அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
முடிவில் தங்களுக்கு தெரிந்த 2 பேர்களை கொலை செய்து விட்டு தற்போது காவல்துறை பிடியில் 6 பேர் உள்ளனர். முதலில் நேற்று (10-02-2024) தெரிந்த அய்யப்பன் கொலை 2 வதாக நடந்தது. பாளை சமாதானபுரம் பாபு செல்வம் கொலை தான் நேற்று (10-02-2024) முதலில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட செய்துங்கநல்லூர் போலீசார் பிடியில் 3 பேரும், நெல்லை மாநகர காவல் பெருமாள்புரம் போலீசார் பிடியில் 3 பேரும் உள்ளனர். டாஸ்மாக் ரசவாதம் பிடி தளர்ந்தால் தான் இரட்டைக் கொலையில் தெளிவு பிறக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக