தென்காசி மாவட்டம் - புதிய ஆட்சியராக துரை.ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

தென்காசி மாவட்டம் - புதிய ஆட்சியராக துரை.ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு.

.com/img/a/

தென்காசி, ஜன்.30, பொதுமக்கள் தன்னை எந்த நேரம் வேண்டுமானாலும் சந்திக்கலாம் அதற்கு எந்தவித தடையும் இல்லை என தென்காசி மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஏ.கே கமல் கிஷோர் பேட்டி


திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிந்து புதிய மாவட்டமாக உதயமாகி 4 வருடங்கள் ஆகிய நிலையில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய துரை.ரவிசந்திரன் உயர்கல்வி துறை இயக்குனராக பணி மாறுதல் செய்யப்பட்டு புதிய ஆட்சியரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது


இதனை தொடர்ந்து  மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய ஏ.கே கமல் கிஷோர் இன்று தென்காசி மாவட்டத்தின் 6வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,
தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

மேலும் பொதுமக்கள் தன்னை எந்த நேரம் வேண்டுமானாலும் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கூறலாம், அதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு முழு முயற்சி எடுப்பேன் என தெரிவித்தார். 


மேலும் கூறுகையில், தமிழக அரசு சார்பில் மக்களுக்கு கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடையும் வகையில் அதற்கு தேவையான முழு நடவடிக்கைகளும் எடுப்பேன் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad