வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு குழாய் வழியாக செல்லும் நீர் உடைப்பு ஏற்பட்டு விரயம்.. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு குழாய் வழியாக செல்லும் நீர் உடைப்பு ஏற்பட்டு விரயம்..

.com/img/a/

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் மேற்குப் பகுதி கரையில் உள்ள பாசன மதகு மூலம் குடிகாடு பகுதிக்கு வீராணம் ஏரியிலிருந்து அருகே உள்ள கோதாவரி வாய்க்காலில் பெரிய சிமெண்ட் குழாய் மூலம் தூண்கள் அமைக்கப்பட்டு கடந்து செல்கிறது.


இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை உருவாக்கிய சோழர்களால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பழமையான பாசன முறை ஆகும். இதேபோல் மேற்குப் பகுதி வீராணம் ஏரி கரைகளில் ஐந்து இடங்களில் இது போன்ற அமைப்பு உள்ளது. இதனால் மேற்குப்பகுதி கிராமங்களான கோதண்டவிளாகம், வட்டத்தூர், குடிகாடு, புடையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாசனத்திற்கு தண்ணீர் வீராணம் ஏரியிலிருந்து கொண்டு வந்து  பயன்படுத்த  முடிந்தது. இந்நிலையில் இது போன்ற குழாய்களில் இப்போது இரண்டு மட்டுமே உடையாமல் இருப்பதாகத் தெரிகிறது. 


இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 46 அடிக்கு மேல் உயர்ந்து வரும் நிலையில் புதிதாய் சென்ற மாதம் தான் பாசன மதகு மற்றும் அதில் ஷெட்டர் அமைக்கப்பட்டது. சிமெண்ட் குழாயில் தண்ணீர் செல்லும் போது பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில்  தண்ணீர் விரயமாகி வருகிறது. ஆனாலும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பயன்படாமல் விரயமாகி வருகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad