திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு திட்டங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகளை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் பசுமடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினர். மேலும், பசுமடம் கட்டுவதற்கான கல்வெட்டினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். விழாவில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக