செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 25 அக்டோபர், 2023

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

.com/img/a/

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு தைலாவரம் பகுதியில் ஆலோசனைக் கூட்டம். இந்திய ஜனநாயகக் கட்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜெயந்தி செல்வகுமார் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ரெயின்போ குடியிருப்பு நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் மறைமலைநகர்  ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சுஜாதா பெருமாள்  முன்னிலை இக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் த.ஆனந்த முருகன், கலந்து கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருக்கும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


அப்பகுதி மக்கள் கூட்டத்தின் வாயிலாக மூன்று கோரிக்கைகள் வைத்தனர் தங்கள் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது,மற்றும் இப்பகுதியில் சமூகவிரோதிகளால் அச்சுறுத்தால் ஏற்படுகிறது ஆகவே கேமரா பொருத்தப்பட வேண்டும்,மேலும் நாங்கள் சென்னைவாசிகள் இங்கே வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம் ஆகவே எங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். 


மேலும் கோரிக்கையை கேட்டறிந்த இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர். ஆனந்த முருகன் தங்களின் கோரிக்கை அனைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.இதில் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad