எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா.


சோழநாட்டுத் திருத்தலங்களில் கருவூர் என போற்றபடும் திருஞானசம்பந்தரால்  தேவாரம் பாடல் பாடிய தலமாக விளங்கும் அருள்தரும் அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனாகிய பசுபதீஸ்வரர் கோயிலில் பூக்குடலை விழா நடைபெற்றது.


முன்னொரு காலத்தில் கரூர் பகுதியில் வாழ்ந்த சிவகாமிஆண்டார் எனும் சிவ பக்தர் நாள்தோறும் பூக்களை இறைவனுக்கு அளித்து சிவ தொண்டாற்றி வந்தார். ஒரு நாள் அந்த பூக்கூடையை பட்டத்து யானை பறித்து தட்டிவிட்டது. இதையறிந்த அதே ஊரில் வாழ்ந்து வந்த எறிபத்த நாயனார், சிவகாமியாண்டார் சிவ தொண்டை கலங்கபடுத்திய யானையின் துதிக்கையை கோடாரியால் வெட்டினார். இதை அறிந்த புகழ்ச்சோழ மன்னன் அங்கு வருகிறார். 

அப்போது அங்கு சிவனடியார் ஒருவர் மட்டுமே இருக்க சிவனடியார் தவறு செய்து இருக்க மாட்டார் என நினைத்து தனது உடைவாளை எடுத்து தனது கழுத்தை வெட்ட முற்படுகிறார். மன்னனின் சிவ பக்தியை உணர்த்த நாயனார் அவரை தடுத்து தன்னை வெட்ட முற்படுகிறார். அப்போது பசுபதீஸ்வரர் அம்மையப்பராக இடப வாகனத்தில் காட்சி கொடுத்து வெட்டப்பட்ட யானை துதிக்கையை இனத்து யானை பாகன் மற்றும் வீரர்களை உயிர்ப்பு செய்து அருள் வழங்கினார்.


இந்த நிகழ்வு நடந்தது அட்டமி திதி எனவே ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அட்டமி திதியில் பூக்குடலை விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் 48,27,11,4  நாட்கள் என சிவ பதக்கம் உள்ள உருத்திராக்க மாலை அணிந்து விரதம் இருந்து "தொண்டெல்லாம் மலர் தூவி" என தொடங்கும் கருவூர் தேவார பதிகம் பாடி நோன்பு இருந்தனர். 


மேற்கண்ட நிகழ்ச்சியை கரூர் மாநகராட்சி பள்ளி எதிரில் எதிரில் அமைக்கப்பட்ட உள்ள விழா பந்தலில் சிவனடியார்கள் திருவேடம் அணிந்து செய்து காண்பித்தனர் பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக பூக்குடலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆனிலையப்பர் மற்றும் பைரவருக்கும் சுவாமிகளுக்கு சாற்றப்பட்டு மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து பங்கேற்ற சிவனடியார்கள் சிவ கைலாய வாத்தியம் இசைத்தும் பூக்குடலைகளில் பூக்களை சுமந்து வந்தும் இறைவனுக்கு அற்பணித்தனர், விழாவுக்கான ஏற்பாடுகளை கரூர் அர்த்தசாம பூசை  அடியார் அறக்கட்டளை குழு சிறப்பாக செய்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/