உத்தமர் காந்தி மகான்
சத்தியத்தின் சோதனைகளில் வெற்றி கண்டு சத்தியத்தின் வரலாற்றை நமக்களித்தார். சத்தியமும் அகிம்சையும்உயிர் மூச்சாகி சாதி, மத பேதமின்றி ஒற்றுமையால் எத்திசையும் அமைதியுடன் மக்கள் வாழ ஏற்றமிகு நல்வழியை நமக்கு அளித்தார் உத்தமராம் காந்தி மகான். பாரதத்தின் விடுதலையை அறவழியில் பெற்றுத் தந்தார்.
சத்தியத் தாய் காந்தி மகான் பெற்றுத்தந்த முத்தான சுதந்திரத்தை பேணிக்காத்து முன்னேற்ற பாதையில் நாமும் சென்று இத்தரணி மீதினிலே பாரதத்தை ஈடில்லா வல்லரசாய் உயர்த்தி காட்ட இத்தருணம் சபதம் ஏற்போம்.இந்நாளில் இதயத்தில் அவர் நினைவாக மகிழ்ச்சி கொள்ளலாம்.
- ஆர்.எஸ்.அசோகன், அருப்புக்கோட்டை.
இதை நமக்கு அளித்த அசோகன் கைத்தறி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்தி மகான் மீது பற்று கொண்டவர். கவிதை மற்றும் பேச்சு போட்டி ஆகியவைகளில் பங்கேற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக