திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம்.

.com/img/a/

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முன்னாள் மாணவர் சங்க தலைவர்  முரளி கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். 


கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, விவேகானந்தா பள்ளி செயலர் சுவாமி பரமானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசி உரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கல்லூரியின் வளர்ச்சி பற்றி உரையாற்றினார். சங்கத்தின் இணைச்செயலாளர் செல்வம் சங்கத்தின் கடந்த ஆண்டின் நிகழ்வுகள் பற்றி உரையாற்றினார். பொதுக்குழு கூட்டத்தில், வந்திருந்த உறுப்பினர்களின் ஒப்புதலோடு சங்கத்தின் வரவு செலவினை பற்றி முறையான அறிக்கையை சங்க பொருளாளர் முனைவர் பட்டினத்தார் விளக்கி கூறினார். 


சங்க உறுப்பினர்கள் அவர்களது ஆலோசனைகள் எதிர்பார்ப்புகளை ஒருவர் பின் ஒருவராக உரையாடினார். மேனாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ மற்றும் மேனாள் முதல்வர் முனைவர் ராமமூர்த்தி, மேனாள் பொருளியல் துறை ஆசிரியர் முனைவர் ஜெயபாலன், மேனாள் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் வெங்கடசுப்பு, மேனாள் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார் மற்றும் மேனாள் வேதியல் துறை பேராசிரியர் முனைவர் செவ்வேள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் ராஜா நன்றி உரை கூறினார். கல்லூரி அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு, குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள்  கார்த்திகேயன் மற்றும் முனைவர் மாரிமுத்து, விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ்,  மற்றும் வேதியல் துறை தலைவர்  சேர்வாரமுத்து, வேதியல் துறை பேராசிரியர்  தர்மானந்தம் சங்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். 


இறை வணக்கத்துடன் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அந்தந்த துறை சார்ந்த முன்னாள் மாணவர்கள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களை விளக்கி கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad