இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துகளில் செல்லூம் போது ஏற்படும் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பது குறித்தும், மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், பள்ளி, கல்லூரி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகயுள்ள வழித்தடங்களில் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை கூடுதலாக இயக்குவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை மூலம் மாவட்டத்தில் பேருந்துகளில் கூட்ட நெரிசல்கள் அதிகம் உள்ளாதாக கண்டறியப்பட்ட 39 வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக