பேர்ணாம்பட்டு வனச்சரகம் சார்பில் பசுமை திட்டத்தின் துவக்க தினம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

பேர்ணாம்பட்டு வனச்சரகம் சார்பில் பசுமை திட்டத்தின் துவக்க தினம்.

photo_2023-09-25_20-00-26

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகம் சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கம் நடைபெற்றது. மண்டலவனப் பாதுகாவலர் வேலூர் மற்றும் மாவட்ட வனஅலுவலர் வேலூர் அறிவுறுத்தலின்படி (24.09.2023) தேதி 10.30 மணியளவில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சாத்கர் ஊராட்சி கோட்டைகாலனி கிராமத்தில் உள்ளஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேர்ணாம்பட்டு வனச்சரகம் சார்பில் பசுமை தமிழ்நாடுதிட்டததின் இரண்டாமாண்டுதுவக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. 

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லப்பா, திமுக மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் ராஜமார்தாண்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியகுழுதுனைதலைவர் லலிதாடேவிட், அரவட்லா ஊராட்சிமன்ற துனைதலைவர் சின்னப்பொன்னு ஏழுமலை, தன்னார்வலர் ஸ்ரீகாந்த், பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துக் கொண்டனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad