ஆற்காடு முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 செப்டம்பர், 2023

ஆற்காடு முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சாலையைச் சார்ந்தவர் தட்சிணாமூர்த்தி   ஆற்காடு முன்னாள் நகர மன்ற  துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்  இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 19-11-1942 ஆம் ஆண்டு முதல் எங்களது வழிவழியில் வந்த சொத்தினை பாகப்பரிவினைக்காக இராணிப்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து எனது பாகமாக கிடைக்கப்பெற்ற ஆற்காடு, அண்ணாசாலை நெ. 175-ல் உள்ள சொத்தின் விவரம்: 28வது பிளாக், டி.எஸ். நெ. 144-ல் பகுதி பழைய சர்வே எண். 77/1 பி இதன் அளவு 0127 சதுர மீட்டர், ஏ வார்டு 28வது பிளாக் டி.எஸ்.நெ. 145-ல் பகுதி பழைய சர்வே எண். 77/ பி இதன் அளவு 0042 சதுர மீட்டர், எ வார்டு 28வது பிளாக் டி.எஸ்.நெ. 146 பழைய சர்வே எண். 76/11/2 இதன் அளவு 0392 சதுர மீட்டர்,மேற்படி வார்டு மேற்படி பிளாக் டி.எஸ். நெ. 147 பழைய சர்வே நெ. 76/1, எ3 இதன் அளவு 0005 சதுர மீட்டர், மேற்படி வார்டு மேற்படி பிளாக் டி.எஸ். நெ. 148 பழைய சர்வே நெ. 77/1ஏ இதன் அளவு 2330 சதுர மீட்டர் ஆகும்.


மேற்படி இடத்திற்காக நகராட்சி அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியதில் டி.எஸ்.நெ. 144 மற்றும் டி.எஸ்.நெ. 145 இவை இரண்டிற்கும் பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து மீண்டும் பட்டா வழங்கக் கோரியதில் 2017 ஆம் ஆண்டு நகராட்சி சார்பு ஆய்வாளர் எனது இடத்தை அளந்து அண்ணாசாலையில் உள்ள பக்கத்திற்கு அத்து குறித்து காண்பித்தார்.

ஆனால் இந்த இடத்தை எனது சுவாதீனத்திற்கும் எனது பெயருக்கும் பட்டா மாற்றி வழங்கவில்லை. தற்போது டி.எஸ்.நெ. 144 மற்றும் டி.எஸ். 145 ல் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி இடத்தினை ஆய்வு செய்து எனக்கு சேர வேண்டிய சொத்தினை சுவாதீனம் கொடுத்து தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/