தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் ஆனந்தராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியை ஷிபா ஜெனி அமுதா வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 53 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூா் நகர மன்ற தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் திமுக கழக ஒன்றிய செயலாளரும், நகர் மன்ற துணைத்தலைவருமான செங்குழி ஏபி.ரமேஷ், திருச்செந்தூர் நகர திமுக கழக துணை செயலாளர் தோப்பூர் மகாராசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ருபன், செந்தில்குமார். தினேஷ், கிருஷ்ணா, முத்துக்குமார். மகேந்திரன், முத்துகிருஷ்ணன், ஆட்டோ கண்ணன், சுதாகர், ஆறுமுகம், ரேவதி, கோமதிநாயகம் மற்றும் கல்வி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கல்வி அலுவலர் குருநாதன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட திமுக ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக