பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் கொடைவள்ளல் PL.பழனியப்பன்- PL.சிவகாமி குடும்பத்தினர் சார்பில் திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கொடை வள்ளல் PL.பழனியப்பன்- PL.சிவகாமி குடும்பத்தினர் சார்பில் ரூ.20 இலட்சம் செலவில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் கல்வி நலன் காக்க உதவிடும் வகையில் கொடை வள்ளல் PL.பழனியப்பன்- PL.சிவகாமி குடும்பத்தினர் சார்பில் ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டது.இக்கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இந்த புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார்.கொடை வள்ளல் PL.பழனியப்பன்- PL.சிவகாமி குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் இராமதிலகம், பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், கவுன்சிலர் புவனேஸ்வரி காளிதாஸ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.ஆசிரியர் விஜயலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். அண்ணாமலை செட்டியார், புரவலர் மாணிக்கவேல், நகரச்செயலாளர் அழகப்பன், பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் தொடங்கிய புதிய வகுப்பறை திறப்பு விழாவில் ஆசிரியர்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர்.கொடை வள்ளல் PL.பழனியப்பன்- PL.சிவகாமி குடும்பத்தினர் புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.இந்நிகழ்வில் டாக்டர் சுப்பிரமணியம்,டாக்டர் ராமநாதன், பொறியாளர் ராமநாதன்,மெடிக்கல் கணேசன்,அப்பள்ளி ஆசிரியர்கள்,
மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டு கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வனிதா, பூமிதேவி, கார்த்திகா, பழனியம்மாள், சுதா ஆகியோர் செய்திருந்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக