கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா கொத்தட்டை மதுரா கோ.பஞ்சகுப்பம் கிராமத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய முதலமைச்சர் ஆக இருந்த கலைஞர் அவர்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் வசித்து வந்தவர்களை இன்று அந்த பட்டா இடத்தை காலி சொல்லி அனைவர் வீட்டு வாசலிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாக அறிவிக்கை நோட்டீஸ் ஒன்றை பொதுப்பணித்துறை மூலம் ஒட்டி சென்றுள்ளார்கள்.
இதனால் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் பட்டா கொடுத்த இடத்தை காலி செய்ய சொன்ன பொதுப்பணித்துறையை கண்டிக்கின்றோம் வட்டாட்சியாளரை கண்டிக்கின்றோம் என கோஷம் எழுப்பப்பட்டு அவர்களுக்கு கொடுத்த பட்டா இடத்தை கிராம வருவாய் கணக்கில் திருத்தம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.
- புவனகிரி செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக