"மாநில துப்பாக்கி சுடும் போட்டி; ராமகிருஷ்ணா மாணவருக்கு வெள்ளி" - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

"மாநில துப்பாக்கி சுடும் போட்டி; ராமகிருஷ்ணா மாணவருக்கு வெள்ளி"

IMG-20230804-WA0012

 "மாநில துப்பாக்கி சுடும் போட்டி; ராமகிருஷ்ணா மாணவருக்கு வெள்ளி"


            மதுரையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.


மதுரை ரைபிள் கிளப் சார்பில், 48-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்தது. கோவை நவ இந்தியா,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'பி.காம். ஐ.டி.,' மூன்றாமாண்டு மாணவர் திவாகர் 50மீ., புரோன் போட்டியில் பங்கேற்றார்.



இதில், ஜூனியர் ஆண்கள் தனிப்பிரிவில், திவாகர், 564 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், ஆண்கள் பொதுப்பிரிவில் 5-வது இடம் பெற்றார். திவாகர் தென் மண்டலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெற்றார்.


வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவரை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், தேசிய மாணவர் படை கேப்டன் விவேக் ஆகியோர் வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad