நீலகிரி மாவட்டம் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம்

 

IMG-20230825-WA0061

சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் கடந்த 15-ந் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டம், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

அந்த வகையில், திருக்குவளை பள்ளியில் இன்று  நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். அதன்படி நீலகிரி மாவட்டம் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி குமார், உதவி திட்ட அலுவலர் முத்து, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கீர்த்தனா, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தாமோதரன், டெபியூட்டி பிடிஓ பிரகாஷ்,  zonal Depul5 BDO- சுரேஷ், noon neal மேக்கர் கானகி கிராமன், சேரங்கோடு கிராம ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஜ், சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியை கண்ணதாசன்,மாவட்ட திட்ட உறுப்பினர் அனீபா மாஸ்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கோபால் கிருஷ்ணன், முத்துசாமி, கலைமணி, சேரங்கோடு கிராம மக்கள் பெரியதம்பி, சுரேஷ், தேவதாஸ், கிருஷ்ண மூர்த்தி, கணபதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் B.சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்கள் வி. முத்தம்மாள், டி.சி.சித்ரா, எஸ்.நத்ரா,  இடைநிலை ஆசிரியர் ஏ.எம்.அஸிதா, ஏ.நிரஞ்சினி, பி.விவேக், திருசெல்வி, ஏஞ்சல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad