நீலகிரி மாவட்டத்தில் பைன் மர காய்களில் கை வண்ணம் அழகு பொருள்களாக மாறும் அற்புதம் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் பைன் மர காய்களில் கை வண்ணம் அழகு பொருள்களாக மாறும் அற்புதம் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்

IMG-20230806-WA0089

 பைன் மர காய்களில் கை வண்ணம் அழகு பொருள்களாக மாறும் அற்புதம் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் 


நீலகிரி மாவட்டம் நான்கில் மூன்று பங்கு  வனப்பகுதிகளை கொண்ட இயற்கை வளமான மாவட்டம் என்பதால் இங்கு பெருபாலன இடங்கள்  பல்வேறு அரிய வகை மரங்கள் மற்றும் இலை கொடிகளாக  காட்சியளித்து வருகின்றன.


எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், நீர் நிலைகள், சோலைக் காடுகள், புல்வெளிகள், சுற்றுலாத் தலங்கள் என எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென இருப்பதால் காண்போரை கவர்ந்திழுக்கும். 


அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட  பைன் மரங்கள் அடர் பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளும், உயரமாகவும், நேராகவும் வளரும் தன்மை கொண்டது.


தேவதாரு என்று அழைக்கப்படும் இந்த  பைன் மரங்கள் நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டு வருகிறது



பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுவதால் பல ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. ஊட்டி கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் என்ற பெயரில் சுற்றுலாத் தலமே உள்ளது.


இவ்வளவு அழகான இந்த பைன் மரங்கள் ஊசி போன்ற இலைகளைத் தொடர்ந்து உதிர்ப்பதால் மரத்துக்கு அடியில் இலைகள் அடுக்குகளாகச் சேர்ந்து தரையில் புல் பூண்டுகள்கூட வளரவிடாமல் செய்கிறது. 


இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பைன் மரக்காடுகள் பறந்து விரிந்து கிடந்தாலும் எந்தப் பயனும் இல்லை என கூறபடும் நிலையில்  இந்த மரங்களை வைத்து பலர் வாழ்ந்து வருகின்றனர்



பைன் மரங்களில் இருந்து கீழே விழும் காய்களை  சேகரித்து அவற்றை தங்களின் கை வண்ணதால் அழகிய அலங்கார பொருட்களாக மாற்றி பலர் வியாபாரம் செய்து வருகினறனர் 


பைன் மர காய்களுக்கு அழகான வடிவம் கொடுத்து மேலும் பல்வேறு வகையான வர்ணங்கள் பூசி தத்ரூபமாக அலங்கார பொருட்களாக ஊட்டியில்  விற்பனை செய்து வருகின்றனர்.


இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆர்வத்துடன்  இந்த அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad