தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகர் மீனவ கிராமத்தில் கடந்த வருடத்தில் கடலுக்கு மீன் பிடிக்க இரண்டு மீனவர்கள் படகில் சென்றதாகவும், அவ்வாறு கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் காணாமல் போனதால் அவருடைய உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தனர், ஆனால் காணாமல் போன இருவரும் இது வரை கண்டறிய முடியவில்லை, இன்றோடு அவர்கள் காணாமல் போய் ஒரு வருடம் ஆகிறது.
இந்நிலையில் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தூத்துக்குடி பாராளுமன்ற எம்பி கனிமொழி, திருச்செந்தூர் தொகுதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்தும், உடனடியாக பாதிக்கபட்டவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக