தீண்டாமையை ஒழித்து மனிதர்களாக ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
இன்று 22.08.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மோகன்ராஜ் வழிகாட்டுதலின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று உட்கோடங்களிலூம் தீண்டாமையை ஒழித்து மனிதர்களாக ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில், கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் திருகணங்கூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உளுந்தாண்டார் கோவில் கிராமத்திலும் மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் G.அரியூர் கிராமத்திலும் தீண்டாமையை ஒழித்து மனிதர்களாக ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் அனைத்து சமுதாய மக்களை ஒன்றினைக்கும் வகையிலும் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்று கூட்டி சமூக ஒற்றுமை குறித்தும், பொதுமக்களிடையே வன்கொடுமை நடவாமல் தடுப்பது குறித்தும், வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசல் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மகேஷ், சமுக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் கணபதி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் - க.சமியுல்லா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக