தூத்துக்குடி:திருவைகுண்டத்தில் முருக்கு கடை வியாபாரி வெட்டிக் கொலை - மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி:திருவைகுண்டத்தில் முருக்கு கடை வியாபாரி வெட்டிக் கொலை - மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

.com/img/a/

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்நாதன்(43). இவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.


இவர் திருவைகுண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முருக்கு கடை நடத்தி வருகிறார். இன்று 05.08.2023 சனிக்கிழமை மாலை கடையில் அவர் இருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அறிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. 


இது குறித்து தகவல் அறிந்ததும் திருவைகுண்டம் துணை சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது கொலைக்கான காரணம் குடும்ப சொத்து பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் கொலையாளிகள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



நேற்று முன் தினம் திருவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில் கொலை நடந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் அப்பகுதியில் மீண்டும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

#End.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad