மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தகவல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தகவல்

TM_0523_CJ_doc7l37tfz0cplv7cplcj

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடுவதற்கு 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனம் கலந்துக்கொள்ள உள்ளது. படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு தனியார் வேலைவாய்ப்பினை பெற்று வழங்கிடுவதற்கும், மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் சுயதொழில்புரிய விருப்பமுள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு மான்யத்துடன் கூடிய வங்கி கடனும், மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும், ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும், இ-சேவை மையம் அமைத்திட வழிமுறையும், சுயதொழில்புரிவதற்கு தேவையான பயிற்சிகளுக்கான விவரமும் அளிக்கப்படவுள்ளது.

19.08.2023 அன்று காலை 10.00மணி முதல் மாலை 3.00 வரை கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெறவிருக்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்துக்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள இம்முகாம் நடத்தப்படுவதாகவும், மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரு.திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், தமிழ்நாடு உரிமைகள் திட்டம், அறை எண்.111, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் (தொலைபேசி எண். 9043260751, 04142-284415) தொடர்பு கொள்ளுமாறும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ்  தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad