கடலூர் பகுதியில் நடைபெறும் முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

கடலூர் பகுதியில் நடைபெறும் முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்

.com/img/a/

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 05.08.2023 (சனிக்கிழமை) முதல் 16.08.2023 வரை 14 ஒன்றியங்களில் உள்ள 557 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றது. இதற்கான விண்ணப்பங்கள் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு விண்ணப்பத்துடன் வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வரவேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.


இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04142-230652, வாட்ஸ் அப் எண் : 8825789592. இன்று கடலூர் தாலுக்கா விற்க்குபட்ட காரைக்காடு, குண்டு உப்பலவாடி, பெரிய கங்கனாங்குப்பம் நாணமேடு பகுதிகளில் நடைபெற்ற முகாமினைமாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad