அறியாத வயசு புரியாத காதல் மரணத்தில் முடிந்த முடிவு... தற்கொலையா? அல்லது கொலையா? - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

அறியாத வயசு புரியாத காதல் மரணத்தில் முடிந்த முடிவு... தற்கொலையா? அல்லது கொலையா?

blur-photo.com_1691227938

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் கும்பகரை ரோடு பகுதியில் குடியிருந்து வருபவர் வேலவர் இவருடைய மகன் 21 வயதுள்ள மாரிமுத்து கூலி வேலை செய்து வருகிறார்அதே பகுதியில் குடியிருந்து வருபவர் சம்பத் - பேச்சியம்மாள் இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர், இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் மூன்றாவதாக மகாலட்சுமி என்பவர் 15 வயதுள்ள இவர் மாரிமுத்து உடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக தெரிகிறது.


இது சம்பந்தமாக பெரியகுளம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டு மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், மூன்று மாத கால சிறை வாசத்திற்கு பின்பு வெளியே வந்த மாரிமுத்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பத் மகள் மகாலட்சுமி அடிக்கடி என்னை திருமணம் செய்து கொள் என்று மாரிமுத்து வீட்டிற்கே சென்று பலமுறை வற்புறுத்தியுள்ளார்.


இது சம்பந்தமாக வேலவர் மற்றும் அவருடைய மனைவி மீண்டும் பெரியகுளம் காவல் நிலையத்தில் அமைதியாக இருக்கும் என் மகனை வேண்டுமென்று  திருமணம் செய்து கொள் என்று அடிக்கடி மகாலட்சுமி கூறுவதாக  புகார் செய்துள்ளார், இது சம்பந்தமாக இரு வீட்டாரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளதாக தகவல் தெரிகிறது. இந்நிலையில் இன்று காந்திநகர் கும்பக்கரை ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் புதிய சேலை மூலமாக இரண்டு பேரும் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளனர். 


இது சம்பந்தமாக அருகில் இருந்தவர்கள் பார்த்து தகவல் தந்ததின் பெயரில் பெரியகுளம் காவல்துறையினர் இறந்த இருவரது உடலையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இரு வேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட இந்த விபரீத காதலால் ஏற்பட்ட மரணம் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு வீட்டிற்கும் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.


அதேசமயம் இறந்த இருவரும் தூக்கிட்ட சேலை புதிய சேலையாக உள்ளது என்றும் தூக்கிட்டவர்கள் ஒரே நேரத்தில் தூக்கு போட்டுள்ளதால் இவர்களுடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர். மேலும் இருவரது மரணத்திற்கும் உண்மையான காரணங்களை காவல்துறை கண்டுபிடித்து உரிய விசாரணை மூலமாக உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad