பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் பிடாரிஅம்மன் கோவில் ஆடிமாத ஒற்றைத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் பிடாரிஅம்மன் கோவில் ஆடிமாத ஒற்றைத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

.com/img/a/

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் மீனாட்சி அம்மன் சுந்தரரேஸ்வரர் கோவிலில் உள்ள பிடாரிஅம்மனுக்கு ஆடிமாத காப்புக்கட்டப்பட்டு தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சாமி திருவீதி உலா நடைபெற்றது.ஒன்பதாம் நாள் காப்பு அவிழ்க்கப்பட்டு ஒற்றைத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் திருவீதியுலா நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வைக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து அம்மன்குறிச்சி முக்கிய வீதிகளின் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், கல்லம்பட்டி கண்டியாநத்தம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad