இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்.

.com/img/a/

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமேஸ்வர மங்கலம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நேற்று சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. 


இந்த விழாவிற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு அவர்கள் தலைமை தாங்கினார். நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ.வடிவேலு அவர்கள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். காந்தி கலந்து கொண்டு பட்டிமன்றத்தை துவக்கி வைத்து பேசியதாவது : தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் மோசமான ஆட்சியை பொதுமக்கள் எதிர்கொண்டனர்.

.com/img/a/

பின்னர் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் மற்றும்  மாதந்தோறும் மகளிர்க்கு உரிமை தொகை, மகளிர்க்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். 


பொதுமக்கள் அனைவரும் திமுக ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் .இனி தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது. வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றி மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்று அவர் ஆவேசமாக பேசினார்.திமுக ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது முன்னாள் முதல்வரின் கருணாநிதியின் அரசியல் பணியா அல்லது கலைப் பணியா என்னும் தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டி மன்றம் நடந்தது.


இதில்  மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட திமுக அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், டவுன் பஞ். தலைவர்கள் நாகராஜன் (தக்கோலம்) ரேணுகாதேவி (நெமிலி) கவிதா (பனப்பாக்கம்) ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், திமுக நகர செயலாளர்கள் ஜனார்த்தனன், சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வடகண்டிகை பாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad