மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

.com/img/a/

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் கோவை மாநகர காவல் துறை மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாநகர தெற்கு மண்டல துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமை தாங்கினார் போத்தனூர் சாரக உதவி ஆணையாளர் கரிகால் பாரி சங்கர் சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழிப்புணர்வு பேரணியை ஆணையர் சண்முகம் கொடியசைத்து துவக்கிவைத்தார் இதில் சுமார் 2000 பேருக்கு மேல் கலந்து கொண்டனர் ரத்தினம் கல்லூரி முன்பிருந்து சுந்தராபுரம் சிக்னல் வரை நடைபெற்றது இப்பேரணியில் ரத்தினம் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம் முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad