புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வட்டார அளவிலான மாணவ, மாணவிகள் பங்குபெற்ற பேச்சு போட்டி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வட்டார அளவிலான மாணவ, மாணவிகள் பங்குபெற்ற பேச்சு போட்டி

.com/img/a/

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வட்டார அளவிலான மாணவ, மாணவிகள் பங்குபெற்ற பேச்சு போட்டி நடைபெற்றது.



புதுக்கோட்டை மாவட்டம் 
பொன்னமராவதியில் வட்டார அளவிலான மன்றப் போட்டிகள் நடைபெற்றது.தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குபட்ட அரசு பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வட்டார அளவிலான மன்றப் போட்டிகள் 30-31 ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பேச்சப்போட்டியில் சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கலைவாணன் முதலிடமும், மாணவி டேலியா ஸ்ரீ இரண்டாமிடம், கவிதைப்போட்டியில் ஆலவயல்
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி
நிவேதா முதலிடமும்,நல்லூர்
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்
நவீன் இரண்டாமிடம்,சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யா மூன்றாமிடமும், கட்டுரைப்போட்டியில் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யவர்ஷினி முதலிடம், ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் துளசி இரண்டாமிடமும் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான மன்றப்போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.இப்போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் தொடங்கிவைத்தார். வட்டார மன்றப்போட்டிகள் ஒருங்கிணைப்பாளர்கள் ஞானமணி,சுதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இப்பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்தனர்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad