ஊத்தங்கரையில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

ஊத்தங்கரையில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

photo1690989236

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானாவில் இந்திய குடியரசு கட்சி சார்பில், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விசாரணையின்றி தூக்கிலிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய குடியரசு கட்சி மாவட்ட இணை செயலாளர் எழில்மாறன் தலைமை வகித்தார். 


ஒன்றிய தலைவர் ஆனந்தன், மகளிர் அணி பொறுப்பாளர் தீபிகா, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில செயல் தலைவர் சிவன், மாநிலபொதுச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஊத்தங்கரை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை மரியதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad