திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் கடைவீதியில் மெய்யப்பன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையை அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்று உள்ளார். மளிகை கடையின் வெளியே உப்பு மூட்டைகளை வைத்திருந்தார்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது உப்பு மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் உப்பு மூட்டைகளை திருடி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றது தெரிய வந்தது.
தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உப்பை யாரும் திருட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கடைகளில் உப்பு மூட்டைகளை வெளியே வைத்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது உப்பு மூட்டைக்கே ஆபத்து வந்திருப்பது அய்யலூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக