புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (55) மற்றும் மதியழகன்(60) உறவினரின் விசேஷத்திற்காக சுசுகி பைக்கில் விழுப்புரம் வந்து சென்றுள்ளனர். தண்டபாணி வாகனம் ஓட்டி வந்துள்ளார் .இரவு 9:30 மணி அளவில் விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த இண்டிகா கார் ஆனது முன்புற வலது பக்கம் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து தண்டபாணி ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது மதியழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் மற்றும் தண்டபாணி என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக