கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம், புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 05.09.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருன் தம்புராஜ் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்
தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு 16.08.2023-க்குள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக