தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சரின், காலை உணவுத் திட்டத்தை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி செயலாளர் செ.ராதாகிருஷ்ணன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலாராணி, அங்கயற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வே.கார்த்திகேயன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பெற்றோர் ஆசிரியர் கழகம் வீராசாமி, பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக